×

ஆந்திராவில் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் போராட்டம்.: விஜயவாடா முழுவதும் முடங்கியது

விஜயவாடா: ஆந்திராவில் புதிய சம்பள உயர்வு ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயவாடாவில் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சில வாரங்களுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு 11-வது ஊதிய திருத்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. ஆனால் அதில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவில்லை. அதற்கு பதிலாக பிட்மெண்ட் 23 சதவிகிதம் உயர்த்தி உள்ளனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு எந்த பயனுமில்லை என அவர்கள் கூறியுள்ளனர். முன்னதாக ஆந்திர மாநில தேர்தலின் போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதியளித்தார். அதனால் தற்போது அதை செய்யவில்லை என அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதனையடுத்து ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்தக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் விஜயவாடா முழுவதும் முடங்கியது. மேலும் 7ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டங்களை அவர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. …

The post ஆந்திராவில் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் போராட்டம்.: விஜயவாடா முழுவதும் முடங்கியது appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Vijayawada ,salary ,Commission ,
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்